பொருளாதார நிபுணர் டாக்டர் ராஜீவ் குமார் அவர்கள் , நிதி ஆயோக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இப்பதவியில் இருந்த அர்விந்த் பனகாரியா , பதவியில் இருந்து விலகி கல்விப் பணிகளுக்குத் திரும்பப் போவதாக அறிவித்துள்ளார் .
ராஜீவ் குமார் , 2006 முதல் 2008 வரை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழுவின் (National Security Advisory Board ) உறுப்பினராக இருந்தார். அவர் இந்தியத் தொழிலதிபர்கள் கூட்டமைப்பில் (Confederation of Indian Industries - CII) முக்கியப் பொருளாதார நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கி , இந்தியத் தொழில்துறை அமைச்சகம் , மத்திய நிதி அமைச்சகம் போன்றவற்றில் முக்கியப் பதவிகளையும் வகித்துள்ளார்.
ராஜீவ் குமார் பல தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார் . அவற்றுள் சில ,
மன்னர் அப்துல்லா பெட்ரோலியம் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையம், ரியாத் ( சவுதி அரேபியா) / King Abdullah Petroleum Studies and Research Center, Riyadh
ஆசியான் கூட்டமைப்பின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்
பாரத ஸ்டேட் வங்கி
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (Indian Institute of Foreign Trade)
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில், குழந்தைகள் நல மருத்துவராக உள்ள டாக்டர் வினோத் பால் அவர்களும் நிதி ஆயோக் குழுவின் ஒரு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.