TNPSC Thervupettagam

ராஜீவ் கௌபா

August 7 , 2023 350 days 200 0
  • அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஆனது, அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபாவிற்கு மேலும் ஓராண்டுப் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது.
  • இதனால் இவர் இந்திய வரலாற்றில் அதிக காலம் பணியாற்றிய அமைச்சரவைச் செயலாளர் என்ற பெருமையினைப் பெற உள்ளார்.
  • பொது நலன் கருதி அமைச்சரவைச் செயலாளருக்குப் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
  • எனினும், இந்தப் பதவி நீட்டிப்பினை ஒரே நேரத்தில் மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் வழங்கப் படக் கூடாது.
  • 1958 ஆம் ஆண்டு அனைத்திந்தியக் குடிமைப் பணிகள் (இறப்பு மற்றும் பணி ஒய்வுப் பலன்கள்) விதிகளைத் தளர்த்துவதன் மூலம் இந்தப் பதவி நீட்டிப்பு செய்யப் பட்டது.
  • அமைச்சரவையின் நியமனக் குழுவில் இந்தியப் பிரதமர் (அதிகாரப்பூர்வ தலைவர்) மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்