ராஜ்ய சபாவின் அன்றாட அலுவல்களை வழி நடத்துவதற்கு ஏற்படுத்தப்படும் வழிநடத்துதல் குழுவிற்கு (presiding officers) பீஹாரைச் சேர்ந்த ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர் காகஷான் பர்வீனை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு நியமித்துள்ளார்.
அண்மைய காலத்தில், இக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவரேயாவார்.
மாநிலங்களவை விதிகளின் படி, மாநிலங்களவைத் தலைவர் அல்லது மாநிலங்களவைத் துணைத் தலைவர் இல்லாத காலங்களில் அவைக்குத் தலைமை வகிக்க மாநிலங்களவை உறுப்பினர்களிலிருந்து 6 துணைத் தலைவர்கள் அல்லது தலைமையேற்பாளர்கள் கொண்ட வழிநடத்துதல் குழுவை மாநிலங்களவைத் தலைவர் நியமிக்க வேண்டும்.
சத்ய நாராயண ஜதியா (பா.ஜ.க), திருச்சி சிவா (தி.மு.க), T.K. ரங்கராஜன் (CPM), புவனேஷ்வர் கலிட்டா (காங்கிரஸ்), பசவராஜ் பாட்டில் (பாஜக), சுகேந்து சேகர்ராய் (TMC) ஆகிய 6 பேர் தற்போது வழிநடத்துதல் குழுவில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களாவர்.