கர்நாடக ஆளுநர் வாஜ்பாய் வாலா தனது அலுவல் பூர்வ குடியிருப்பை ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைத்துள்ளார்.
இதற்கு முன் இக்கட்டிடம் ‘பெங்களூரு குடியிருப்பு‘ என்று அழைக்கப்பட்டது. இது 1840 மற்றும் 1842 இடையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசின் மைசூரு பகுதியின் ஆணையரான சர் மார்க் கப்பன் என்பவரால் கட்டப்பட்டது.
ராஜ் பவனில் உள்ள 19 படுக்கை அறைகளின் பெயர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஆறுகள் மற்றும் மலைகளின் பெயரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.