இராமகிருஷ்ண பரமஹம்சரின் 182-வது பிறந்த நாள் விழா பிப்ரவரி 18, 2018 அன்று கொண்டாடப்பட்டது.
பிப்ரவரி 18, 1836 அன்று கடாதர் சட்டோபாத்யாய் (Gadadhar Chattopadhyay) என்ற இயற்பெயர் பெற்ற இவர், மேற்கு வங்க மாநிலத்தின் ஹீக்ளி மாவட்டத்திலுள்ள கமர்புகுர் (Kamarpukur) என்ற இடத்தில் பிறந்தார்.
இவருடைய ஆன்மீக இயக்கமானது மத பாகுபாடு மற்றும் சாதி வேறுபாடு ஆகியவற்றை நிராகரித்ததன் மூலம் மறைமுகமாக தேசியவாதத்திற்கு உதவி புரிந்தது,.
இராமகிருஷ்ணரின் மத மற்றும் ஆன்மீக தத்துவமான ஷாக்டோ (Shakto), அத்வைதம், வேதாந்தம் , உலகளாவிய சகிப்புத் தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
இராமகிருஷ்ணரின் சீடர்களில் முதன்மையானவர் விவேகானந்தர். இராமகிருஷ்ணரின் தத்துவங்களை உலக அரங்கில் நிறுவியதில் (in establishing) விவேகானந்தர் ஒரு கருவியாக செயல்பட்டார்.
இராமகிருஷ்ணரின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, 1897ல் விவேகானந்தர், இராமகிருஷ்ண இயக்கத்தை ஆரம்பித்தார்.