தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) இராமநாதபுரம் மாவட்டத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்திப் பூங்காவினை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் அரசுக்கு சொந்தமான மின்விநியோக நிறுவனம் ஆரம்பிக்கும் முதல் சூரியமின்சக்திப் பூங்கா இதுவே ஆகும்.
இந்த திட்டமிடப்பட்டுள்ள சூரியமின்சக்திப் பூங்கா இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரமான கடலாடியில் உள்ள நரிப்பையூர் கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் சூரியக் கதிர்வீச்சு அதிகம் உள்ள மாவட்டங்கள் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகியவையாகும்.
தமிழ்நாடு ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தை (Tamil Nadu Energy Development Agency - TEDA) பொறுத்த வரை இராமநாதபுரம் 5.67 என்ற அளவிற்கு உலகளாவிய கிடைமட்ட கதிரியக்கம் (Global Horizontal Irradiance - GHI) கொண்டுள்ளது. இதனால் உற்பத்தித் திறன் (Plant Load Factor - PLF) அதிகமாக இருக்கும்.