TNPSC Thervupettagam
May 28 , 2020 1522 days 667 0
  • மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தேசிய நவீனக் கலை கூடமானது “ராம்கின்கர் பாய்ஜ், அமைதியான மாற்றம் மற்றும் வெளிப்பாடுகளின் (உணர்ச்சிகளின்) மூலம் பயணம்” என்ற தலைப்பு கொண்ட ஒரு மெய்நிகர் சுற்றுலாவை நடத்தியுள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டு மே 26 அன்று ராம்கின்கார் பாய்ஜ் அவர்களின் 115வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக நடத்தப்பட்டது.
  • ராம்கின்கர் பாய்ஜ், (1906 – 1980) என்பவர் புகழ்பெற்ற சிற்பக் கலை வல்லுநர், ஓவியர் மற்றும் வரைபட விளக்கக் கலைஞர் ஆவார்.
  • இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள பான்கூராவில் பிறந்தார்.
  • நந்தலால் போஸ் மற்றும் பெனோடேபெஹரி முகர்ஜி ஆகியோருடன் இணைந்து இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு நவீனக் கலைக்கான முக்கிய மையங்களில் ஒன்றான சாந்தி நிகேதனை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்