TNPSC Thervupettagam

ராம்சார் தளங்கள் - இந்தியா

January 31 , 2020 1633 days 2852 0
  • ராம்சார் ஒப்பந்தத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் தளங்களில் இந்தியா மேலும் 10 ஈரநிலங்களைச் சேர்த்துள்ளது.
  • இதன் மூலம், ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 37 தளங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • சமீபத்தில் ராம்சார் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள 10 தளங்களில், மகாராஷ்டிரா (நாந்துர் மாதமேஸ்வர் பறவைகள் சரணாலயம்) மாநிலமானது தனது முதலாவது ராம்சார் தளத்தைப் பெற்றுள்ளது.

வரிசை எண்

மாநிலங்கள்

ராம்சார் தளங்கள்

1

மகாரஷ்டிரா

  1. நந்தூர் மாதமேஸ்வர் பறவைகள் சரணாலயம்

2

பஞ்சாப்

  1. பியாஸ் பாதுகாக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட காடுகள்
  2. கேஷோபூர் - மியானி சமூக காடுகள்
  3. நங்கல் வனவிலங்கு சரணாலயம்

3

உத்தரப் பிரதேசம்

  1. நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம்
  2. பார்வதி அர்கா பறவைகள் சரணாலயம்
  3. சமன் பறவைகள் சரணாலயம்
  4. சர்சாய் நவார் ஏரி
  5. சமஸ்பூர் பறவைகள் சரணாலயம்
  6. சாண்டி பறவைகள் சரணாலயம்

ராம்சார் ஒப்பந்தம் மற்றும் மாண்ட்ரெக்ஸ் பட்டியல் பற்றி

  • ராம்சார் ஒப்பந்தம் என்பது ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று கையெழுத்தானது.
  • மாண்ட்ரெக்ஸ் பட்டியல் என்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் ஈரநிலங்களின் பட்டியலில் உள்ள ஈரநில தளங்களின் பதிவுகளாகும்.
  • கியோலேடியோ தேசியப் பூங்கா (ராஜஸ்தான்), லோக்டாக் ஏரி (மணிப்பூர்) ஆகியவை மாண்ட்ரெக்ஸ் பட்டியலில் உள்ள இந்திய தளங்களாகும்.
  • ஈரமான நிலங்களைப் பாதுகாப்பது நல் சே ஜல் என்ற திட்டத்தை அடைய உதவும். இந்தத் திட்டமானது 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நீர் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்