September 9 , 2019
1785 days
570
- நீதித்துறையில் புகழ் பெற்றவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியாவின் சிறந்த குற்றவியல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி சமீபத்தில் காலமானார்.
- இவர் வடமேற்கு மும்பை மக்களவை தொகுதியில் 1977 மற்றும் 1980 ஆண்டுகளில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
- இவர் 1988 ஆம் ஆண்டில் முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் மத்திய சட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
- மேலும் இவர் 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-91.jpg)
Post Views:
570