அமெரிக்காவைச் சேர்ந்த நாசாவின் விண்கல வசதியைப் பயன்படுத்தி இலங்கையின் முதலாவது செயற்கைக் கோளான “ராவணா - 1” ஆனது விண்ணுக்கு ஏவப்பட்டது.
இந்தச் செயற்கைக் கோளானது இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சிப் பொறியாளர்களால் ஜப்பானில் உள்ள கியூசு தொழில்நுட்ப நிறுவனத்தில் வடிவமைத்துக் கட்டமைக்கப்பட்டது.
ராவணா – 1 செலுத்துதலானது சர்வதேச விண்வெளி உலகில் இலங்கை நுழைந்துள்ளதைக் குறிக்கிறது.