ராவணா I செயற்கைக்கோளானது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜப்பான் மற்றும் நேபாளத்தின் இரண்டு BIRDS 3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.
இந்தச் செயற்கைக்கோளானது அமெரிக்காவிலிருந்து சிக்னஸ் – 1 விண்கலத்தின் உதவியுடன் ஏப்ரல் 17 அன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டது.
இது இலங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் படங்களைப் பிடித்தல் மற்றும் செயல்பாட்டு அணுகுமுறையை நிலையப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பணிகளை இது நிறைவேற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.