TNPSC Thervupettagam

ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத் மகோத்சவ்

May 31 , 2018 2272 days 732 0
  • மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத் மகோத்சவ் நிகழ்ச்சியின் 9வது பதிப்பு உத்தரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி நகரில் நடத்தப்பட்டது.
  • மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் “ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்” என்ற நிகழ்ச்சியின் கீழ் 9வது ராஷ்ட்ரிய சம்ஸ்கிருதி மகோத்சவ்வை நடத்தியுள்ளது.

  • கர்நாடகா, அரியானா, குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் கலை, நடனம், சமையற்கலை மற்றும் நாட்டுப்புற இசை ஆகியவற்றின் மூலமாக இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றிடுவர்.
  • ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத் என்ற திட்டத்தின் அணி சேர்க்கையின் படி உத்தரகாண்டிற்கான ஜோடி என்று சேர்க்கப்பட்டுள்ள மாநிலம் கர்நாடகாவாகும். அதே வேளையில் நாடு முழுவதும் உள்ள கலைஞர்கள் திறமையை வெளிக்காட்டும் சமயத்தில் கர்நாடகாவிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • ராஷ்ட்ரிய சமஸ்கிருத் மகோத்சவ்வின் சிறப்பு முக்கியத்துவம் இந்தியக் கலாச்சாரத்தின் மிகுந்த பன்முகத் தன்மையையும் தனித்துவத்தையும் பறைசாற்றுவதோடு தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்திட மாநிலங்களுக்கிடையே கலாச்சார ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவதும் ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்