TNPSC Thervupettagam

ராஷ்ட்-அஸ்டாரா இரயில் சேவை இணைப்பு

May 23 , 2023 554 days 278 0
  • ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித் தடத்தினை (INSTC) மேம்படுத்தச் செய்யும் வகையிலான இரயில் சேவை இணைப்பினை உருவாக்குவதற்காக சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டு உள்ளன.
  • இது பால்டிக் கடலில் உள்ள ரஷ்யத் துறைமுகங்களை இந்தியப் பெருங்கடல் மற்றும் வளைகுடாவில் உள்ள ஈரானியத் துறைமுகங்களுடன் இணைப்பதற்கு உதவுகிறது.
  • இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தக விரிவாக்கத்தை மிகவும் எளிதாக்குகிறது.
  • இந்த இரயில் சேவை இணைப்பானது, புவி ரீதியிலான இணைப்பை மேம்படுத்தச் செய்வதற்கும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமான ஒரு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய இரயில் இணைப்பானது பயண நேரத்தில் நான்கு நாட்கள் வரை மிச்சப் படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்