TNPSC Thervupettagam
April 20 , 2024 222 days 296 0
  • பூமியின் கண்ட மேலோட்டிற்கு அடிப்பகுதியில் ஒரு மாபெரும் பெருங்கடல் மறைந்து காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பூமியின் மேற்பரப்பிலிருந்து 700 கிலோமீட்டர் கீழே அமைந்துள்ள ரிங்வுடைட் எனப் படும் பாறையில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
  • இந்த நிலத்தடி நீர்த்தேக்கம் ஆனது புவியின் மேற்பரப்பில் அமைந்த கடல்களின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
  • ரிங்வுடைட்டின் ஹைட்ரஜனை ஈர்த்து தண்ணீரைத் தேக்கவும் வழி வகுக்கும்.
  • ரிங்வுடைட்டின் படிக அமைப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சம் இருப்பதால் ரிங்வுடைட் தண்ணீரை உறிஞ்சும் ஓர் உறிஞ்சு பொருள் போல செயல்படுகிறது.
  • பூமியின் மூடக இடைமாற்று மண்டலத்தில் (410 முதல் 660-கிலோமீட்டர் ஆழம் வரை) உள்ள கனிமங்களின் அதிக நீர்ச் சேமிப்பு திறன் ஆழமான பகுதியில் H2O தேக்கத்தின் உருவாக்கத்திற்கான சாத்தியத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்