TNPSC Thervupettagam
December 14 , 2019 1682 days 613 0
  • இந்தியாவின் 50வது துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் - சி48 ஆனது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
  • இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (Satish Dhawan Space Centre - SDSC) ஏவு தளத்திலிருந்து வணிக ரீதியிலான ஒன்பது  செயற்கைக் கோள்களுடன் ரிசாட் - 2 பிஆர் 1ஐ விண்ணுக்கு எடுத்துச் சென்றது.
  • இந்த வெற்றிகரமான திட்டமானது ஸ்ரீஹரிகோட்டாவின் SDSC ஏவு தளத்தில்  இருந்து செலுத்தப்பட்ட 75வது விண்கலமாகும்.
  • இது ஒரு ரேடார் உருவமாக்கல் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
  • இது விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் சேவைகளை வழங்குகின்றது.
  • இதன் பணிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
  • இதன் ஒன்பது வாடிக்கையாளர் செயற்கைக் கோள்கள் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவையாகும்.
  • இந்த செயற்கைக் கோள்கள் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒரு வணிக ஏற்பாட்டின் கீழ் ஏவப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்