பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளரான ரிது பெரி இந்தியாவிற்கான உஸ்பெகிஸ்தானின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை தூதுவராக உஸ்பெகிஸ்தானின் சுற்றுலா அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் இவரேயாவார்.
2016 ஆம் ஆண்டில் காதி மற்றும் கிராம தொழிலக ஆணையத்தின் ஆலோசகராக ரிது பெரி நியமிக்கப்பட்டார்.