விண்வெளியில் உள்ளத் தேவையற்றப் பொருட்களை சுத்தம் செய்வதற்கான சாதகமான தீர்வுகளை சோதனை செய்வதற்கான முதல் செயற்கைக் கோள் சர்வதேச விண்வெளி நிலையத்தினால் (ISS-International Space Station) செலுத்தப்பட்டிருக்கிறது. அது விரைவில் அதன் சுற்று வட்டப் பாதையில் பரிசோதனைகளைத் தொடங்க உள்ளது.
பிரிட்டனால் தயாரிக்கப்பட்ட Remove DEBRIS என்று பெயரிடப்பட்ட செயற்கைக் கோளானது பூமியைச் சுற்றிவரும் ஆபத்தானக் குப்பைக் குவியல்களை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட உலகின் முயற்சிகளில் முதல் ஒன்றாகும்.
இந்த செயற்கைக் கோளானது ஏப்ரல் 2018-ன் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட Space X CRS-14-ன் மூலம் ISS-க்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த செயற்கைக் கோள் UK-ன் (United Kingdom) சர்ரே பல்கலைகழகத்தில் உள்ள சர்ரே விண்வெளி மையத்தின் தலைமையின் கீழ் இயங்கும் விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனக் குழுக்களினால் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான நிதியினை ஐரோப்பிய ஆணையம் இணைந்து வழங்குகிறது.