TNPSC Thervupettagam

ரிமூவ் டெப்ரிஸ் (Remove DEBRIS)

June 27 , 2018 2342 days 765 0
  • விண்வெளியில் உள்ளத் தேவையற்றப் பொருட்களை சுத்தம் செய்வதற்கான சாதகமான தீர்வுகளை சோதனை செய்வதற்கான முதல் செயற்கைக் கோள் சர்வதேச விண்வெளி நிலையத்தினால் (ISS-International Space Station) செலுத்தப்பட்டிருக்கிறது. அது விரைவில் அதன் சுற்று வட்டப் பாதையில் பரிசோதனைகளைத் தொடங்க உள்ளது.
  • பிரிட்டனால் தயாரிக்கப்பட்ட Remove DEBRIS என்று பெயரிடப்பட்ட செயற்கைக் கோளானது பூமியைச் சுற்றிவரும் ஆபத்தானக் குப்பைக் குவியல்களை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட உலகின் முயற்சிகளில் முதல் ஒன்றாகும்.
  • இந்த செயற்கைக் கோளானது ஏப்ரல் 2018-ன் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட Space X CRS-14-ன் மூலம் ISS-க்கு கொண்டு செல்லப்பட்டது.
  • இந்த செயற்கைக் கோள் UK-ன் (United Kingdom) சர்ரே பல்கலைகழகத்தில் உள்ள சர்ரே விண்வெளி மையத்தின் தலைமையின் கீழ் இயங்கும் விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனக் குழுக்களினால் உருவாக்கப்பட்டது.
  • இந்த திட்டத்திற்கான நிதியினை ஐரோப்பிய ஆணையம் இணைந்து வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்