விக்கெட் கீப்பர்களான ஜாக் ரூசெல் (இங்கிலாந்து) மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த சாதனையை இந்தியாவின் ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.
இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகளைப் பிடித்து முந்தைய சாதனையை சமன் செய்தார்.
மேலும் இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான நரேன் தம்ஹானே மற்றும் சையத் கிர்மானி ஆகியோரைக் கடந்து ஒரு டெஸ்ட் தொடரில் 20 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய வீரராகவும் ஆனார்.
ஆஸ்திரரேலியாவின் பிராட் ஹாடின் ஒரே டெஸ்ட் தொடரில் 29 கேட்சுகளைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.