உடலின் உள்ளேயுள்ள உள்வைப்புகள் மற்றும் கட்டிகளின் இடங்களை துல்லியமாக கண்டறியும் கம்பியில்லா ‘உள்ளுடல் GPS’ அமைப்பை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT – Massachusettes Institute of Technolgy) ஆராய்ச்சியாளர்கள் இந்த அமைப்பிற்கு ‘ரீமிக்ஸ்’ (ReMix) என பெயரிட்டுள்ளனர். மேலும் இது சென்டிமீட்டர் (Cm) அளவிலான துல்லியத்துடன் உள்வைப்புகளை எளிதில் கண்டறிவதற்கு உதவிட கண்டுபிடிக்கப்பட்டது.
நிகழ்நேர செயல்பாட்டு மருத்துவத் தகவல்களை துல்லியமாக வழங்காதது இந்த அமைப்பின் பிரதான குறைபாடாகும்.