TNPSC Thervupettagam

ருத்ரம் – முதலாவது கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை

October 14 , 2020 1508 days 669 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஒரு கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இது எதிரி ரேடார்கள், தகவல் தொடர்பு இடங்கள் மற்றும் இதர ரேடியோ அதிர்வெண் உமிழும் இலக்குகள் போன்ற எந்தவொரு கதிர்வீச்சு உமிழும் சாதனத்தையும் இலக்கு வைத்து, அதைக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு கதிர் வீச்சு எதிர்ப்பு ஏவுகணையாகும்.
  • உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட முதலாவது கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை இதுவாகும்.
  • இது தனது செலுத்தப்படும் நிலையைப் பொருத்து 200 கிலோ மீட்டர் வரையிலான வரம்பு நிலை கொண்டதாக உள்ளது.
  • இது 500 மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரையிலான உயரத்திலிருந்து செலுத்தப்படும் திறன் கொண்டதாகும். மேலும் இதன் வேகம் 0.6 மாக் முதல் 2 மாக் வரையிலான  (0.6 to 2 mach) வேகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்