உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஹெலிகாப்டரான (வானுலங்கு ஊர்தி) ருத்ரா தன்னுடைய முதல் வெளியுலக அறிமுகத்தை நடப்பாண்டு ராஜபாதையில் நடைபெற உள்ள குடியரசு தின படை அணிவகுப்பில் மேற்கொள்ள உள்ளது.
ALH-WSI என்றும் அழைக்கப்படும் HAL ருத்ரா ஹெலிகாப்டரானது இரு முக்கிய பதிப்புகளை உடையது.
மார்க் III பதிப்பு (இது ஆயுத வசதியற்ற ருத்ரா ஹெலிகாப்டர் ஆகும்)
மார்க் IV
ருத்ரா ஹெலிகாப்டர்கள் குடியரசு தின அணி வகுப்பில் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்தால் உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டரானது முன்னோக்கு தேடு அகச்சிவப்பு வசதியையும் (Forwarding looking infrared – FLIR), பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகள், வானிலிருந்து வான் இலக்கை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணைகள் போன்ற பல்வேறு ஆயுத வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்திய விமானப் படையானது இந்திய விமானப் படை உள்நாட்டுத் தொழிற்நுட்பமயமாக்கலை ஊக்குவித்தல் (IAT – Encouraging indigenisation) என்ற கருப்பொருளுடனும், ராணுவ முப்படைகள் கூட்டாக, “இராணுவ வீரர்கள் நம் தேசத்தின் சொத்து” (Veterans are assets to the Nations) என்ற கருப்பொருளுடனும் குடியரசுத் தின விழாவில் படை அணி வகுப்பை நடத்த உள்ளன.