நடைமுறைக்கு வந்த 76 வருடங்களில் மாநிலங்களவை, இருநாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையை ஊக்குவிக்கும் நோக்கில் ருவாண்டாவின் செனட்டோடு முதன்முதலாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆவார். இந்த ஒப்பந்தம் ருவாண்டா செனட்டின் சிறப்புத்தலைவர் பெர்னாட் மகுஸாவுடன் கையெழுத்தானது.
பெர்னாட் மகுஸாவின் தலைமையிலான மூன்று செனட்டர் பிரதிநிதிகள் குழு, மற்ற நாடுகளின் மேலவைகளிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்த முதல் பிரத்யேக குழுவாகும்.