TNPSC Thervupettagam

ருவாண்டா - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

September 26 , 2023 298 days 188 0
  • உலகளவில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற பெண்களின் சராசரி எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளது.
  • ஆனால் நாடாளுமன்றத்தில் அதிக சதவீதப் பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாக ருவாண்டா உள்ளது.
  • அதன் 80 கீழவையின் உறுப்பினர்களில் 49 பேர் (சுமார் 61 சதவீதம்) பெண் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • உலகப் பொருளாதார மன்றத்தின் 2023 ஆம் ஆண்டு பாலின இடைவெளிக் குறியீட்டில் இடம்பெற்ற 146 நாடுகளில் ருவாண்டா 12வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • 1994 ஆம் ஆண்டில், 800,000க்கும் மேற்பட்ட டுட்ஸி இனத்தவர்கள் மற்றும் நடுநிலை ஹூட்டு இனத்தவர்கள், ஹூட்டு இனப் போராளிகளால் படுகொலை செய்யப் பட்டு விட்டனர்.
  • இதன் விளைவாக, அப்போருக்குப் பிறகு அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீத மக்கள் பெண்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்