TNPSC Thervupettagam

ரூபாய்களை இருப்பில் வைத்திருக்கும் வங்கிகள்

April 10 , 2019 2058 days 626 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ரூபாய்களை இருப்பில் வைத்திருக்கும் வங்கிகளை அமைப்பதற்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
  • மத்திய வங்கியானது ரூபாய்களை இருப்பில் வைத்திருக்கும் நியாயமான கட்டுப்பாடுகளுடன் ரூ.1000 கோடியிலான CBL (ரூபாய்களை இருப்பு வைத்திருக்கும் வங்கிகளின் மீது வரம்பு/ Chest Balance Limit) என்ற வரம்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
  • புதியதாக உருவாக்கப்படும் ரூபாய்களை இருப்பு வைத்திருக்கும் வங்கிகளானது ஒரு நாளைக்கு மலைகள், அணுக முடியாத பகுதிகள் போன்ற இடங்களில் 2.1 இலட்சம் ரூபாய்களையும் மற்ற அனைத்து இடங்களிலும் 6.6 இலட்சம் ரூபாய்களையும் கையாளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.
  • ரூபாய்களை இருப்பு வைத்திருக்கும் வங்கிகளானது ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை இருப்பு வைத்து வங்கிகளுக்கு விநியோகிக்கப் படுவதற்காக மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்