ரூபாய் வர்த்தகத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல்
October 3 , 2022 784 days 376 0
இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்வதற்காக ரஷ்யாவின் காஸ்ப்ரோம் வங்கியில் சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை UCO வங்கி பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் அமைந்துள்ள UCO வங்கியானது, இந்திய வங்கிச் சேவை கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலைப் பெற்ற முதல் வங்கியாகும்.
காஸ்ப்ரோம் வங்கியானது, ஒரு ரஷ்ய கடன் வழங்கும் நிறுவனமாவதோடு, அது ரஷ்யாவின் முன்னணியில் உள்ள முதல் மூன்று வங்கிகளில் ஒன்றாகும்.
உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான காஸ்ப்ரோம் நிறுவனத்தினால் எரிவாயு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கச் செய்வதற்காக இது அமைக்கப்பட்டது.