TNPSC Thervupettagam

ரெசாங் லா போரின் 60வது ஆண்டு நிறைவு

November 25 , 2022 732 days 376 0
  • குமாவோன் படைப்பிரிவின் 13வது படைப்பிரிவின் சார்லி கம்பனி எனப்படும் பிரிவானது, லடாக்கில் உள்ள ரெசாங் லா கணவாயில் 1962 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப் பட்ட சீனத் தாக்குதலுக்கு எதிராகப் போரிட்டது.
  • மேஜர் ஷைத்தான் சிங் தலைமையில் 117 வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர்.
  • இவர்களில் இந்த போரின் போது 110 பேர் வீரமரணம் அடைந்தனர்.
  • 13வது படைப்பிரிவானது சுஷுல் பகுதியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது.
  • இந்தப் போரின் போது இந்திய வீரர்கள் பலர் உறைபனியால் உயிர் இழந்தனர்.
  • மேஜர் ஷைத்தான் சிங், சீனத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வீரமரணம் அடைந்தார்.
  • அவருக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டதால் மிக உயர்ந்த வீர விருதைப் பெற்ற இரண்டாவது இராணுவ வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • ரெசாங் லா, ரெசின் லா என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள லடாக் மற்றும் சீன நிர்வாகத்தின் ஸ்பாங்கூர் ஏரிப் படுகை ஆகியவற்றிற்கு இடையே உள்ள மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்த ஒரு மலைப்பாங்கானப் பாதையாகும்.
  • இது சீன அரசினால் உரிமை கோரப்பட்டு வரும் சுஷுல் பள்ளத்தாக்கின் கிழக்கு நீர் நிலை முகட்டில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்