TNPSC Thervupettagam

ரெட்பா ஏரி நெருக்கடி

February 5 , 2024 294 days 297 0
  • சில நுண்ணிய ஆல்கா (பாசிகள்) மற்றும் பாக்டீரியாவைத் தவிர்த்து இந்த ஏரியின் நீரில் எந்த உயிர்களும் இல்லை.
  • லாக் ரோஸ் (இளஞ்சிவப்பு ஏரி) என்று அழைக்கப்படும் ரெட்பா ஏரி, ஆப்பிரிக்காவில் செனேகலின் டகார் நகரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • இது கடல் மட்டத்திலிருந்து 6.5 மீட்டர் தூர கரையோரத்துடன் ஒரு தாழ்வான இடத்தில் அமைந்துள்ளது.
  • இந்த ஏரி சுமார் 1 கிலோமீட்டர் பரப்பிலான மணல் திட்டுகளால் கடலில் இருந்து பிரிக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஏரியை விட உயரமான இடத்தில் அமைந்த குன்றுகளில் உள்ள பருவகால நீர் நிலைகளில் இருந்து அதற்கு நன்னீர் வருகிறது.
  • இதனால், ஏரியின் பெரும்பான்மையான நீரானது கடலிலிருந்து வருவதால் அதன் நீர் முழுவதும் உப்பு நீராக உள்ளது.
  • டகார் பகுதியில் உள்ள இந்த ஏரியின் நீரானது, இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளதால் அது முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்