TNPSC Thervupettagam

ரெனாட்டி சோழர் காலத்துக் கல்வெட்டு

September 6 , 2020 1414 days 709 0
  • ரெனாட்டி சோழர் காலத்தைச் சேர்ந்த ஓர் அரிய வகைக் கல்வெட்டு ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கல்வெட்டானது ஒரு உடைந்த தூணின் பகுதியாக டாலமைட்  பலகை மற்றும் ஷேல் பாறை (களிமண் பாறை போன்றது) ஆகியவற்றில் பொறிக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கல்வெட்டு பழமையான தெலுங்கில் எழுதப் பட்டுள்ளது.
  • இது கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இப்பிராந்தியத்தினை ஆண்ட ரெனாட்டி சோழ மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டது.
  • ஆறு மார்ட்டஸ் (ஓர் அளவீட்டு அலகு) நிலத்தை ஒரு பிராமண பூசாரிக்குப் பரிசாக அளித்ததை இந்தக் கல்வெட்டு வெளிக்காட்டுகிறது.
  • இதிலுள்ள சில வரிகள் அந்த நாட்களில் ஒழுக்கத்திற்கு வழங்கப்பட்ட முன்னுரிமையைக் குறிக்கின்றன.

ரெனாட்டி சோழர்

  • ரெனாட்டின் தெலுங்கு சோழர்கள் (ரெனாட்டிச் சோழர்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள்) ரெனாட்டுப் பிராந்தியத்தை (இன்றைய கடப்பா மாவட்டம்) ஆட்சி செய்தனர்.
  • இந்தக் குடும்பத்தின் மூத்த மன்னர் நந்திவர்மன் ஆவார் (கி.பி 500).
  • இந்த மன்னர்கள் தாங்கள் கரிகால சோழர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர்.
  • சமஸ்கிருதத்திற்குப் பதிலாக நிர்வாகத்திலும் கல்வெட்டுகளிலும் தெலுங்கைப் பயன்படுத்திய முதல் ஆட்சி இவர்களது ஆட்சி என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்