TNPSC Thervupettagam

ரைசினா உரையாடல்

January 15 , 2018 2508 days 954 0
  • ரைசினா உரையாடலின் மூன்றாவது பதிப்பு புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த புவி அரசியல் மாநாட்டின் 3வது பதிப்பில் தொடக்க உரையாற்றினார்.
  • வெளிநாட்டு அரசுத் தலைவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும்.
  • ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற்ற இந்த வருட ரைசினா உரையாடலின் முக்கிய கரு “உடைக்கக் கூடிய மாற்றங்களை நிர்வகித்தல் ; எண்ணங்கள், நிறுவனங்கள்,  மரபுகள்”.

ரைசினா உரையாடல்

  • ஆண்டுதோறும் புது தில்லியில் நடக்கும் இந்த ரைசினா உரையாடல், இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கைக்கான பெருமைமிகு மாநாடு ஆகும்.
  • இந்த மாநாடு வெளியுறத்துறை அமைச்சகத்தாலும் முதன்மை சிந்தனைக் களஞ்சியமான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (Observer Research Foundation) என்ற அமைப்பாலும் இணைந்து நடத்தப்படுகின்றது.
  • இந்த மன்றம் சிங்கப்பூரின் ஷாங்கிரிலா (Shangri-La) உரையாடலின் பிரதியைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்