2017-18-ஆம் ஆண்டின் கால்பந்து ரைட்டர்ஸ் சங்கத்தின் (Football Writers' Association) ஆண்டிற்கான கால்பந்தாட்டக்காரர் விருதிற்கு (Footballer of the Year) லிவர்பூல் கால்பந்து அணியின் (Liverpool) முன்கள ஆட்டக்காரரான (forward player) முஹம்மது சலா (Mohamed Salah) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லிவர்பூல் அணிக்காக தன்னுடைய வியக்கத்தகு அறிமுக கால்பந்து சீசனில் 43 கோல்களை அடித்ததனால் இவ்விருதுக்கு முஹம்மது சலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டினைச் சேர்ந்த முஹம்மது சலா இவ்விருதினைப் பெறும் முதல் ஆப்பிரிக்கராவார். இவர் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் கால்பந்து ரைட்டர்ஸ் சங்கத்தின் ஆண்டிற்கான விளையாட்டு வீரர் விருதையும் (Football Writers' Association player of the year award) வென்றுள்ளார்.
1948-ஆம் ஆண்டு முதல் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு கால்பந்து ரைட்டர்ஸ் சங்கத்தினால் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் செல்ஸீ (Chelsea) பெண்கள் கால்பந்து அணி மற்றும் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்கள வீராங்கனையான பிரான் கிர்பி (Fran Kirby) ஆகியோருக்கு பெண்களுக்கான கால்பந்து ரைட்டர்ஸ் சங்கத்தின் ஆண்டிற்கான கால்பந்தாட்டக்காரர் விருது (FWA Women's Footballer of the Year award) வழங்கப்பட்டுள்ளது.