TNPSC Thervupettagam
August 7 , 2018 2302 days 746 0
  • சக்தி திட்டத்தின் கீழ் 6 தொழிற்துறை - நிலை நுண்செயலிகளின் முதல் குடும்பத்தை சென்னையின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தினைச் சேர்ந்த கணினி அறிவியலாளர் உருவாக்கியுள்ளார்.
  • 300 சில்லுகளை (Chips) கொண்ட ஆரம்ப நிலைத் தொகுதி ரைஸ்க்ரீக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள Intel-ன் வசதியில் Linux இயங்கு முறையை இலவசமாக இயக்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சக்தி திட்டம் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் துவக்க முயற்சியாக 2014-ல் தொடங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் நிதி வழங்கப்படுகிறது.
  • அவர்களின் இந்த வடிவமைப்பு திறந்த ஆதாரம் ஆகும். மேலும் மற்றவர்களால் இவ்வடிவமைப்பை ஏற்றுக்கொள்ள முடியும்.
  • 350 MHz அதிர்வெண்ணுடன் NAVIC (இந்திய பிராந்திய வழிகாட்டும் செயற்கைக்கோள்) மற்றும் மின்னணுவின் Internet of Things (IOT) ஆகியவற்றின் தேவைகளை RISECREEK பூர்த்தி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்