சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ரொக்க மேலாண்மையை மிகவும் திறனுள்ள வகையில் மாற்றுவதற்காக வேண்டி ஊரக வட்டார வங்கிகளுக்கு (RRB – Regional Rural Bank) ரொக்கத் தகவமைப்பு வசதியை (liquidity adjustment facility - LAF) நீட்டிக்க முடிவு செய்து உள்ளது.
தற்பொழுது வரை, RRBகள் RBIயின் ரொக்கத் தகவமைப்பு வசதியை அணுக அனுமதிக்கப் படுவதில்லை.
LAF ஆனது வங்கித் துறைச் சீர்திருத்தங்கள் குறித்த நரசிம்மன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.
இது ரெப்போ அல்லது மீண்டும் வாங்குதல் என்ற ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிக நிதிப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யும் ஒரு நிதியியல் கொள்கைக் கூறாகும்.
RBI ஆனது நாட்டில் நிதி ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 4 கூறுகளைப் பயன்படுத்துகின்றது. அவையாவன :
பண ஒதுக்கீட்டு விகிதம்,
ரெப்போ விகிதம் மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதம் (LAF),
முறைசார் ரொக்க விகிதம் மற்றும்
திறந்த வெளி நடவடிக்கைகள்.
LAF வசதியின் 2 முக்கியக் கூறுகள் ரெப்போ விகிதம் மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதம் ஆகியனவாகும்.