TNPSC Thervupettagam
February 22 , 2024 148 days 297 0
  • தமிழ்நாடு அரசானது, சமீபத்தில் பஞ்சு மிட்டாய் என்றும் அழைக்கப்படுகின்ற இனிப்பு மிட்டாய் விற்பனை மற்றும் உற்பத்தியைத் தடை செய்துள்ளது.
  • இந்தப் பஞ்சு மிட்டாய்களில், புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனங்கள் இருப்பதை ஒரு ஆய்வக சோதனை உறுதிப்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கையானது மாநில அரசினால் எடுக்கப்பட்டுள்ளது.
  • உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்தினால் நடத்தப்பட்ட சோதனையில், இந்தப் பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன்-B என்ற ஒரு செயற்கை நிறமூட்டிக் காரணி இருப்பது கண்டறிந்தது.
  • நீல, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை ஆகிய நிறங்களைக் கொடுக்கும் ரோடமைன்-B என்ற நிறமூட்டுக் காரணியானது பாதுகாப்பற்றது என்பதோடு இது மனிதர்கள் உட்கொள்வதற்கும் உகந்ததன்று.
  • ரோடமைன்-B அல்லது RhB என்பது ஜவுளி, காகிதம், தோல் பொருட்கள் மற்றும் வண்ணப் பூச்சுகள் ஆகிய தொழில் துறையில் ஒரு நிறமூட்டுக் காரணியாக சாயமிட பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்