தமிழ்நாடு அரசானது, சமீபத்தில் பஞ்சு மிட்டாய் என்றும் அழைக்கப்படுகின்ற இனிப்பு மிட்டாய் விற்பனை மற்றும் உற்பத்தியைத் தடை செய்துள்ளது.
இந்தப் பஞ்சு மிட்டாய்களில், புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனங்கள் இருப்பதை ஒரு ஆய்வக சோதனை உறுதிப்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கையானது மாநில அரசினால் எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்தினால் நடத்தப்பட்ட சோதனையில், இந்தப் பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன்-B என்ற ஒரு செயற்கை நிறமூட்டிக் காரணி இருப்பது கண்டறிந்தது.
நீல, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை ஆகிய நிறங்களைக் கொடுக்கும் ரோடமைன்-B என்ற நிறமூட்டுக் காரணியானது பாதுகாப்பற்றது என்பதோடு இது மனிதர்கள் உட்கொள்வதற்கும் உகந்ததன்று.
ரோடமைன்-B அல்லது RhB என்பது ஜவுளி, காகிதம், தோல் பொருட்கள் மற்றும் வண்ணப் பூச்சுகள் ஆகிய தொழில் துறையில் ஒரு நிறமூட்டுக் காரணியாக சாயமிட பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும்.