கிரேக்க மொழியில் ரோஜா மரம் என்று பொருள்படும் ரோடோடென்ட்ரான் (பெரிடிய மலர்களைக் கொண்ட பசுமை மாறா செடி வகை) பருவநிலை மாற்றத்திற்கான ஒரு குறிகாட்டி இனமாக கருதப் படுகிறது.
இந்தியாவில் காணப்படும் அனைத்து வகையான ரோடோடென்ட்ரான்களிலும் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் இமயமலைகள் பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்தியத் தாவரவியல் ஆய்வு அமைப்பின் ‘சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் இமய மலைகளின் ரோடோடென்ட்ரான்ஸ் - ஒரு விளக்க அறிக்கை’ என்ற தலைப்பிலான புதிய அறிக்கையில் 45 வகை ரோடோடென்ட்ரான்களைப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் 132 வகையான (80 இனங்கள், 25 கிளையினங்கள் மற்றும் 27 வகைகள்) ரோடோடென்ட்ரான்கள் உள்ளன.
இந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 வகைகளில், 24 வகைகள் டார்ஜிலிங் இமயமலையிலும், 44 சிக்கிம் இமயமலையிலும் காணப்படுகின்றன.
அவை ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மிதவெப்பப் பகுதிகளிலும், தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
ரோடோடென்ட்ரான்கள், முதன்முதலில் 1776 ஆம் ஆண்டில் கேப்டன் ஹார்ட்விக் என்பவரால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் கண்டறியப்பட்டன.
இது நேபாளத்தின் தேசிய மலர் மற்றும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநில மரமாகும்.