TNPSC Thervupettagam

ரோந்து கப்பலை கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது எல் & டி நிறுவனம்

October 29 , 2017 2584 days 950 0
  • ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்ட ரோந்துக் கப்பலை எல் & டி நிறுவனம் கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தது.
  • இது தனியார் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட நாட்டின் முதல் பாதுகாப்புக் கப்பலாகும்.
  • சென்னை எண்ணூருக்கு அருகில் இருக்கும் காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள எல் & டி யின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வெளி நிறுவனத்தின் உதவியில்லாமல் கட்டப்பட்ட ஏழு ரோந்து கப்பல்களின் ( Offshore Patrol Vessels  - OPVs) வரிசையில் ‘விக்ரம்’ முதலாவது தயாரிப்பாகும்.
  • இந்தக் கப்பல் முழு வடிவமைப்பு மற்றும் கட்டுமான முறைகள் ஆகியவற்றுக்காக அமெரிக்க கப்பல் கழகம் (American Bureau of Shipping) மற்றும் இந்தியக் கப்பல் பதிவாளர் (Indian Registrar of Shipping) ஆகியோரிடமிருந்து தர அங்கீகார சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
  • இந்தக் கப்பல் வெப்பமண்டல நிலைகளில் செயல்படும் திறன் கொண்ட அனைத்து வசதிகளுடைய தொலைநிலை அறிகருவி, கடல்பயண வழிகாட்டி மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகிய வசதிகளை  கொண்டிருக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்