TNPSC Thervupettagam

ரோனாகிராம்ஸ் மற்றும் குவெட்டாமீட்டர்ஸ்

November 28 , 2022 602 days 355 0
  • எடைகள் மற்றும் அளவீடுகள் பற்றிய பொது உடன்படிக்கை அமைப்பானது (CGPM) சிறிய அல்லது அளவற்றப் பருமன்களைக் குறிப்பிடுவதற்கு ஒரு புதிய முன்னொட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • 1960 ஆம் ஆண்டில் சர்வதேச அளவீடுகள் அமைப்பு (SI) நிறுவப் பட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்று புதிய அளவீடு ஏற்றுக் கொள்ளப் பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • மிகப்பெரிய அளவீடுகளுக்கான கிலோ மற்றும் மில்லி போன்ற நன்கு அறியப்பட்ட முன்னொட்டுகளின் பிரிவில் ரொன்னா மற்றும் குவெட்டா ஆகியவையும், சிறிய அளவீடுகளுக்கு ரோன்டோ மற்றும் குக்டோ ஆகியவையும் ஏற்றுக் கொள்ளப் பட்டு உள்ளன.
  • பெரிய முன்னொட்டுகள் A என்ற எழுத்தில் முடிவடையும் என்றும் சிறியவை O என்ற எழுத்தில் முடிவடையும் என்றும் இந்த உடன்படிக்கை குறிப்பிடுகிறது.
  • புதிய முன்னொட்டுகள் சில பெரியப் பொருட்களைப் பற்றி நாம் குறிப்பிடும் விதத்தை எளிதாக்கும்.
  • பூமியின் எடை சுமார் ஆறு ரோனாகிராம்கள் என்ற நிலையில் இது ஒரு ஆறு மற்றும் 27 பூஜ்ஜியங்களைக் குறிக்கும்.
  • வியாழனின் எடை சுமார் இரண்டு குவெட்டாகிராம்கள் என்ற நிலையில், இது இரண்டைத் தொடர்ந்து 30 பூஜ்ஜியங்கள் வருவதைக் குறிக்கும்.
  • முன்பு 1991 ஆம் ஆண்டில், வேதியியலாளர்கள் மாபெரும் மூலக்கூறு அளவுகளை வெளிப்படுத்த விரும்பிய போது, ​​ஜெட்டா மற்றும் யோட்டா போன்ற முன்னொட்டுகளைச் சேர்த்தனர்.
  • ஒரு யோட்டா மீட்டர் என்பது ஒன்று மற்றும் 24 பூஜ்ஜியங்கள் கொண்ட எண்ணினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்