TNPSC Thervupettagam
March 29 , 2024 241 days 252 0
  • கோவா மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள், அந்தக் கடலோர மாநிலத்தில் பரவலாக அதன் சுவைக்காக உண்ணப்படும் ஒரு காட்டு காளான் இனத்திலிருந்து தங்க நுண் துகள்களை உருவாக்கியுள்ளனர்.
  • கரையான் புற்றுகளில் வளரும் டெர்மிடோமைசஸ் (கரையானிக் காளான்) என்ற ஒரு இனத்தினைச் சேர்ந்த காளான்கள் அந்தப் பகுதியில் 'ரோன் ஓல்மி' என்று அழைக்கப் படுகிறது.
  • இது கோவா மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள உண்ணக்கூடிய காட்டு காளான் வகையாகும் என்பதோடு, இது மழைக்காலங்களில் உணவாக உட்கொள்ளப்படுகிறது.
  • இந்த வகை காளான், தூய முப்பரிமாணத்திலான உருண்டை வடிவில் வளர்க்கப்பட்டு, நுண்ணிய தங்க துகள்களை உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டது.
  • குறிப்பிட்ட பாதிப்பிற்கான மருந்து உள்ளீடு, மருத்துவ வரைபடமாக்கல் மற்றும் மின்னணு உபகரணங்கள் உற்பத்தி போன்ற பல்வேறு பயன்பாடுகளில் நுண்ணியத் தங்க துகள்களுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஒரு மில்லி கிராம் நுண்ணிய தங்கத் துகள்களின் விலை சுமார் 80 டாலர் ஆகும் என்பதோடு, ஒரு கிராமிற்கு இதன் மதிப்பு சுமார் 80,000 டாலர்கள் ஆகும்.
  • பிற நாடுகள் இவற்றின் உற்பத்திக்கு என்று மிகவும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயன காரணிகளைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்