TNPSC Thervupettagam

ரோம் பிரகடனம்

October 26 , 2024 10 days 37 0
  • FAO அமைப்பின் வருடாந்திர உலக உணவு மன்றத்தினை (WFF) ஒட்டி, நீர் தொடர்பான உயர் மட்ட ரோம் பேச்சுவார்த்தையானது ரோமில் உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்றது.
  • FAO அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் வேளாண்மையில் தண்ணீர்ப் பற்றாக்குறை குறித்த ஒரு உலகளாவியக் கட்டமைப்பின் (WASAG) பங்குதாரர்கள் வேளாண்மையில் தண்ணீர் பற்றாக்குறை குறித்த ரோம் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டனர்.
  • பருவநிலை நெருக்கடியால், குறிப்பாக வேளாண் துறையில் மிகவும் அதிகரித்து வரும் தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் மராகேஷ் எனுமிடத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாட்டில் தண்ணீர் பற்றாக்குறை சார்ந்த சில சவால்களை நன்கு எதிர் கொள்வதில் நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக வேண்டி WASAG முன்னெடுப்பு ஆனது, தொடங்கப் பட்டது.
  • 2050 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்டிற்கு குறைந்தது ஒரு மாதமாவது மிக தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் வேளாண்மையில்  தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு உள்ளாகும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்