TNPSC Thervupettagam

ரோஹிங்கியா விவகாரம்

January 27 , 2020 1672 days 751 0
  • ரோஹிங்கியா விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றமானது (International Court of Justice - ICJ) தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது மியான்மரைக் கட்டுப்படுத்துகின்றது.  மேலும் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது.
  • இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்த வேறு எந்த வழியும் நீதிமன்றத்திற்கு கிடைக்க வில்லை.
  • காம்பியா குடியரசு நாடானது மியான்மர் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி 2019 ஆம் ஆண்டு நவம்பரில் ICJயில் அந்நாட்டின் மீது வழக்குத் தொடர்ந்தது.
  • 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது (Organisation for Islamic Cooperation - OIC) காம்பியாவை ஆதரித்தது.
  • மியான்மர் நாட்டினை நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • இதுவரை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகளவில் மூன்று இனப் படுகொலை வழக்குகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை: கம்போடியா (1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி), ருவாண்டா (1994) மற்றும் ஸ்ரேப்ரினிகா & போஸ்னியா (1995) ஆகியவை ஆகும்.
  • மியான்மர் நாட்டின் கடலோரப் பகுதியான ரகைன் மாகாணத்தில் உள்ள ரோஹிங்கியா கிராமங்கள் மீது மியான்மர் இராணுவம் மிருகத்தனமான ஒடுக்குமுறையைத் தொடங்கியதில் 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 7.3 லட்சம் ரோஹிங்கியாக்கள் வங்க தேசத்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

ICJ பற்றி

  • உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் சர்வதேச நீதிமன்றமானது ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை நீதித்துறை ஆகும்.
  • ICJ ஆனது நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்றது மற்றும் ஐ.நா. அமைப்பால் குறிப்பிடப்படும் சர்வதேசச் சட்ட சிக்கல்கள் குறித்து ஆலோசனைக் கருத்துக்களை வழங்குகின்றது.
  • ஐ.நா. அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ICJயின் உறுப்பினர்களாகும்.
  • ICJ இன் தலைமையிடமானது நெதர்லாந்தின் தி ஹேக்கில் உள்ள அமைதி அரண்மனையில் அமைந்துள்ளது. இது நியூயார்க் நகரில் அமையாத ஒரே ஐ. நா அமைப்பாகும்.
  • இதன் அதிகாரப்பூர்வ அலுவலக மொழிகள் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகியவை ஆகும்.
  • ICJ ஆனது 15 நீதிபதிகள் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது.
  • இந்த 15 பேரில், தல்வீர் பண்டாரி என்ற இந்தியர் 2012 ஆம் ஆண்டு முதலாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய உறுப்பினராக உள்ளார். இவர்  இந்திய உச்ச நீதி மன்றத்தின் நீதிபதியாக இருந்துள்ளார்.
  • இவரது பதவிக்காலம் ஆனது 2027 ஆம் ஆண்டில் முடிவடைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்