TNPSC Thervupettagam

ரோஹித்4ரைனோஸ் (Rohit4Rhinos) பிரச்சாரம்

September 9 , 2019 1776 days 686 0
  • உலக வனவிலங்கு நிதியம் மற்றும் அனிமல் பிளானட் (Animal Planet) உடன் இணைந்து இந்தியாவின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ரோஹித்4ரைனோஸ் என்ற பிரச்சாரத்தைத்  தொடங்கியுள்ளார்.
  • பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (அ) இந்திய காண்டாமிருகத்தினை பராமரிக்கும் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலே இதன் நோக்கமாகும்.
  • உலக காண்டாமிருக நாளான செப்டம்பர் 22 இன் நினைவாக அனிமல் பிளானட் சேனலில் இந்த பிரச்சாரம் தொடங்கப்படவுள்ளது.
  • வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும், இனப்பெருக்கக் கால நோய்களினால் ஏற்படும் அதிக அளவு இறப்பு போன்ற பலவிதமான அச்சுறுத்தல்களை இந்தக் காண்டாமிருகங்கள் எதிர்கொள்கின்றன.
  • நேபாளின் தராய் புல்வெளிகள், உத்திரப் பிரதேசத்தின் வட பகுதி, பீகாரின் வட பகுதி, மேற்கு  வங்காளத்தின் வட பகுதி மற்றும் அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்