TNPSC Thervupettagam

லக்னோ – இரவு நேரப் பூங்கா

August 28 , 2022 693 days 359 0
  • உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறையானது, தலைநகர் லக்னோவில் நாட்டில் முதல் வனவிலங்கு இரவு நேரப் பூங்கா வசதியினைத் தொடங்க உள்ளது.
  • லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட உள்ள இந்த இரவு நேரப் பூங்கா வசதியானது குக்ரைல் வனப்பகுதியில் 350 ஏக்கரில் உருவாக்கப்பட உள்ளது.
  • இந்த இரவு நேரப் பூங்கா வசதியானது 2027.46 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
  • மேலும் 150 ஏக்கரில் ஒரு விலங்கியல் பூங்காவும் கட்டமைக்கப்பட உள்ளது.
  • இங்கு புலி, சிறுத்தை மற்றும் கரடி ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கென தனித்தனி இரவு நேரப் பூங்கா வசதியானது கட்டமைக்கப்படும்.
  • லக்னோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நவாப் வாஜித் அலி ஷா உயிரியல் பூங்கா தற்போது உள்ள இடத்திலிருந்து இந்த இரவு நேரப் பூங்கா வசதிக்கு மாற்றப்படும்.
  • குக்ரைல் ஆற்றுப் பகுதியானது ஓர் அழகிய ஆற்றங்கரையாக உருவாக்கப்படும்.
  • இந்த இரவு நேரப் பூங்காவில் டாய் ட்ரெயின் எனப்படும் பொம்மை ரயிலும் இயக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்