TNPSC Thervupettagam

லச்சத் போர்புகன்

March 3 , 2022 872 days 492 0
  • லச்சித் போர்புகனுடைய 400வது பிறந்தநாளையொட்டி அசாம் முதல்வர் பல நலத் திட்டங்களை அறிவித்திருந்தார்.
  • லச்சித் போர்புகன் என்பவர் அஹோம் (Ahom) படையின் தளபதியாகவும் அசாமிய தேசிய வாதத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் ஆவார்.
  • முந்தையப் போர்களில் அஹோம்களால் கைப்பற்றப்பட்டப் பிரதேசங்களை 1669 ஆம் ஆண்டில், மீண்டும் கைப்பற்றுவதற்காக வேண்டி ராஜ்புத் மன்னர் முதலாம் ராஜாராம் சிங்கினை அவுரங்கசீப் அனுப்பினார்.
  • எனவே, அஹோம் மற்றும் முகலாயர்களுக்கு இடையில், வடக்கு கவுகாத்தியிலுள்ள அலபோய் மலையில் அலபோய் போரானது நடைபெற்றது.
  • அலபோய் போரில் பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு, லச்சித் போர்புகன் 1671 ஆம் ஆண்டில், (வெறும் 2 ஆண்டுகளுக்குள்) முகலாயர்களை அழித்தார் (சராய்காட் போரில்).
  • பிரம்மபுத்திரா நதியில் நடந்த சராய்காட் போரில் (கடற்படை போர்) லச்சித் வெற்றி பெற்றார்.
  • அஹோம் இராஜ்ஜியமானது 13 ஆம் நூற்றாண்டின் அரசரான சாவ்லங் சுகாபாவினால் நிறுவப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்