TNPSC Thervupettagam

லச்சின் வழித் தடத்தில் மோதல்

September 28 , 2022 664 days 312 0
  • சமீபத்தில் எல்லையில் நடந்த மோதலில் அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாட்டு வீரர்கள் கொல்லப் பட்டனர்.
  • இந்த இரண்டு முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளும் நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தின் சர்ச்சைக்குரியப் பிரதேசத்தின் மீது நீண்ட காலமாக மோதல்களில் ஈடுபட்டுள்ளன.
  • இந்தச் சர்ச்சைக்குரியப் பிரதேசமானது சர்வதேச அளவில் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • ஆனால் தற்போது இந்தப் பகுதியானது அர்மீனிய நாட்டின் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
  • லச்சின் வழித்தடமானது அஜர்பைஜானின் லச்சின் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் நாகோர்னோ-கராபாக் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ரஷ்யாவின் அமைதி காக்கும் படையின் கட்டுப்பாட்டின் கீழ் இது இருந்து வந்தது.
  • லச்சின் மாவட்டம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று அஜர்பைஜானின் கட்டுப்பாட்டின் கீழ் திரும்பியது.
  • சமீபத்திய மோதலானது, 2020 ஆம் ஆண்டு மோதல்களுக்குப் பிறகு அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவற்றுக்கு இடையே பிளவு ஏற்படுவதற்கான ஒரு கெடுவாக இருந்தது.
  • ரஷ்யாவால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சமாதான ஒப்பந்தமானது இந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான 2020 ஆம் ஆண்டின் போரினை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • மேலும், இது அஜர்பைஜானில் உள்ள சில ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அர்மீனியா தனது படைகளை திரும்பப் பெற வழி வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்