லடாக்கின் சோ கர் ஈரநிலப் பகுதி
December 27 , 2020
1434 days
633
- இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
- இதன் மூலம், சோ கர் ஈர நிலமானது இந்தியாவின் 42வது ராம்சார் தளமாகவும் லடாக்கின் 2வது ராம்சார் தளமாகவும் மாறியுள்ளது.
- இது ருபுசு பீடபூமியில் அமைந்துள்ள ஒரு மிதக்கும் வகையிலான (ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்) உப்பு ஏரி ஆகும்.
- இந்த அதிஉயரமான ஈரநிலப் பகுதியானது லடாக்கின் சாங்தாங் பகுதியில் அமைந்து உள்ளது.
- சோ கர் வடிநிலப் பகுதியானது சர்வதேச பறவை வாழ்வு அமைப்பின் படி ஒரு முதன்மையான ஏ1 பிரிவு முக்கியப் பறவைப் பகுதியாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
- மேலும் இது மத்திய ஆசியாவின் வலசைப் பகுதியில் உள்ள பறவைகளின் ஒரு முக்கியமான தங்குமிடம் ஆகும்.
- இந்த வடிநிலப் பகுதியானது இந்தியாவில் கருப்புக் கழுத்து கொண்ட நாரையின் முக்கியமான இனப்பெருக்க இடங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
- ராம்சார் ஒப்பந்தமானது ராம்சார் எனப்படும் ஈரான் நகரில் 1971 ஆம் ஆண்டில் பிப்ரவரி 02 அன்று ஏற்படுத்தப் பட்டது.
Post Views:
633