TNPSC Thervupettagam

லட்சத்தீவில் பவளப் பாறை நிறமாற்ற நிகழ்வு

May 10 , 2024 198 days 230 0
  • கடல் வெப்ப அலைகள் காரணமாக லட்சத்தீவு கடலில் பெருமளவிலான பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு பதிவாகியுள்ளது.
  • லட்சத்தீவுகள் கடல் பகுதியில் கணிசமான சதவீத அளவிலான கடினப் பவளப் பாறை இனங்கள் கடுமையான நிறமாற்ற நிகழ்விற்கு உட்பட்டுள்ளன.
  • இது முதன்மையாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து அந்தப் பிராந்தியத்தை நீடித்த காலமாகப் பாதித்து வரும் கடல் வெப்ப அலைகளின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
  • தொடரும் வெப்ப அலைகள் ஆனது கடல் புல்வெளிகள் உட்பட மற்ற முக்கியமான கடல் வாழ்விடங்களையும் அச்சுறுத்துகின்றன.
  • பவளப்பாறைகளைப் போலவே, கடற்பரப்புப் புல்வெளிகளும் கடும் வெப்ப அலைகள் காரணமாக, ஒளிச்சேர்க்கை குறைதல், வளர்ச்சி குறைதல் மற்றும் தடைபட்ட இனப் பெருக்கச் செயல்பாடுகள் போன்ற பாதகமானத் தாக்கங்களை எதிர் கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்