லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் இந்தியா புல்ஸ் வீட்டு வசதி நிதி மன்றங்கள் இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.
புதிய நிறுவனம் இந்தியா புல்ஸ் லட்சுமி விலாஸ் வங்கி என்று அழைக்கப்படும்.
CAR (Capital adequacy ratio) என்பது இடர்பாடுடைய நிறைந்த சொத்துக்கள் மற்றும் நடப்புக் கடன்களுக்கும் அது தொடர்புடைய வங்கியின் மூலதனத்திற்கும் உள்ள விகிதம் ஆகும்.
வணிக வங்கிகள் அதிகப்படியான நிதி எடுப்பதைத் தடுக்கவும் இந்த நடைமுறையில் திவாலாவதைத் தடுப்பதற்காகவும் இந்த விகிதமானது இந்திய ரிசர்வ் வங்கியினால் நிர்ணயிக்கப்படுகின்றது.