குடியரசுத் தலைவர் திரு.இராம்நாத் கோவிந்த், உத்தம் பச்சர்னே என்பவரை லலித்கலா அகாடமியின் முழுநேர தலைவராக நியமித்துள்ளார்.
இவர் பதவியேற்ற தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு தலைவர் பதவியில் நீடிப்பார்.
இதற்கு முன்னர், மத்திய கலாச்சாரத் துறையில் இணைச் செயலாளராக (கல்வி) பணியாற்றி வரும் திரு.ML ஸ்ரீவஸ்தவா அவர்கள் மார்ச் 2018ல் லலித்கலா அகாடமியின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
உத்தம் பச்சர்னே தேசிய லலித்கலா விருது (1985) மஹாராஷ்டிரா கவுரவ் புரஸ்கார் விருது (1985), இளையோர் தேசிய விருது (1986) மற்றும் ஜீவன் கவுரவ் புரஸ்கார் விருது (2017) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
நடப்பில் இவர்,
கோவாவிலுள்ள லலித்கலா அகாடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.
PL தேஷ் பாண்டே மாநில லலித்கலா அகாடமியில் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் ஜன்சேவா சஹாகரி வங்கியின் போரிவாலி கிளையின் இயக்குநர்.
இந்தியாவின் கலைகளைப் பற்றிய புரிதலை நாட்டிற்குள்ளேயும், நாட்டிற்கு வெளியேயும் ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகிய பணியை மேற்கொள்ளும் தேசிய நிறுவனமே லலித்கலா அகாடமி ஆகும்.
கலைகளுக்கான தேசிய அகாடமி எனவும் அழைக்கப்படும் இந்த நிறுவனம், மத்திய கலாச்சாரத் துறையால் நிதியளிக்கப்படும் தன்னாட்சி அதிகாரமுடைய நிறுவனமாகும். இது 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.