அண்மையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான L ஸ்ரீவத்ஸவாவை லலித் கலா அகாடமியின் இடைக்காலத் தலைவராக (Protem Chairman) இந்தியக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
லலித் கலா மேளா அகாடமி (அல்லது) கலைகளுக்கான தேசிய அகாடமியானது (National Academy of Art) இந்தியாவின் கவின்கலைகளுக்கான (Fine Arts) தேசிய அகாடமியாகும்.
உள்நாட்டு அளவிலும் வெளிநாட்டளவிலும் இந்தியாவின் கலைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காகவும், அவற்றைப் பரப்புவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் 1954 ஆம் ஆண்டு புதுதில்லியில் ஓர் தன்னாட்சியுடைய நிறுவனமாக லலித் கலா அகாடமி அமைக்கப்பட்டது.
லலித் கலா அகாடமியானது இந்தியாவில் காட்சிக் கலைத் துறையில் (visual arts) அரசினுடைய உச்ச கலாச்சார அமைப்பாகும்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam) அவர்களினால் லலித் கலா அகாடமி தோற்றுவிக்கப்பட்டது.
உதவித் தொகைகள் மற்றும் மானியங்கள் மூலம் கலை நிறுவனங்கள் மற்றும் கலைஞர்களுக்கு நிதியியல் உதவி வழங்குவதிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை நடத்திவதில் முடிவுகளை எடுப்பதிலும் இந்த அமைப்பு கணிசமான அளவு சுதந்திரச் செயல்பாட்டை கொண்டுள்ளது.
தன்னாட்சியுடைய அமைப்பான லலித் கலா அமைப்பிற்கு மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் முழுவதுமாக நிதியளிக்கப்படுகின்றது.